கொரோனா காலம் அனைவருக்கும் மிகப்பெரிய பேரிடராக அமைந்தது. வெளியூரில் பணிபுரிந்து வந்த நாங்கள் அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்பியபோது, எங்கள் பகுதியில் பெரும்பாலான மக்கள் பீடி சுற்றுதல் மற்றும் தினக்கூலி வேலைகளை நம்பி வாழ்ந்து வந்ததை உணர்ந்தோம். ஊரடங்கு காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, பலர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கினர்.
