Initiatives

Through compassion and collective effort, Lovely Friends organizes charitable activities that empower individuals, support families, and strengthen communities for a brighter future.

முயற்சிகள்

ஒவ்வொரு நாளும் மாற்றத்தை ஏற்படுத்துதல்

பல்வேறு அறப்பணிகள் மூலம், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், வலிமையான மற்றும் ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்கவும் உதவும் உதவிகள், வாய்ப்புகள் மற்றும் வளங்களை நாங்கள் வழங்குகிறோம்.

கோடைகால வகுப்புகள் (Summer Classes)

கோடைகால வகுப்புகள் (Summer Classes) மற்றும் ஆங்கிலப் பயிற்சி ​மே மாத கோடை விடுமுறையை முன்னிட்டு, மாணவர்களுக்காகக் கோடைகால சிறப்பு வகுப்புகளைத் (Summer Classes) தொடங்கினோம். இந்த வகுப்புகளில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆங்கில வகுப்புகள் எடுத்தபோது, மாணவர்கள் எங்களுடன் தொடர்ந்து பயணிக்கத் தொடங்கினர்.

சிலம்பப் பயிற்சி வகுப்பு

மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் விதமாக அடுத்தடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, சிலம்பக் கலையை அறிமுகப்படுத்தினோம். சிலம்பம் என்பது தமிழர்களின் பாரம்பரியமும், அழகிய கலையும் ஆகும். எனவே, மாணவர்களுக்குச் சிலம்பப் பயிற்சியை முற்றிலும் இலவச வகுப்பாக (Free class) வழங்கினோம்.
எங்களின் இந்த முயற்சிக்குத் தீர்த்தபதி அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியரான திருமதி. விஜயலட்சுமி மேம் ( Vijayalakshmi Mam) அவர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்தார். சிலம்பம் கற்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை (Fees) அவரே ஏற்றுக்கொண்டு, மாணவர்களை இலவசமாகப் படிக்க வைத்தார். இதன் மூலம் மேலும் பல மாணவர்கள் எங்களுடன் இணைந்தனர்.

போட்டிகள் மற்றும் வாலிபால் (Volleyball) பயிற்சி

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்களுக்காகப் பல்வேறு போட்டிகளை நடத்தினோம்: ​தடகளப் போட்டிகள் (Sports) ​பேச்சுப் போட்டிகள் ​ஓவியப் போட்டிகள் ​இவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவித்தோம்.
மேலும், எங்கள் மாணவர்கள் வாலிபால் (Volleyball) விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவதைக் கண்டறிந்தோம். இதற்காக நாங்களே ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, அதைச் சுத்தப்படுத்தி, மாணவர்களுடன் பேசி விளையாடுவதற்கான வசதிகளைச்செய்து கொடுத்தோம். தற்போது மாணவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று விளையாடி, வெற்றிகளைப் பெற்று வருகின்றனர். இது எங்களுக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.

லவ்லி ப்ரெண்ட்ஸ் சேரிட்டபிள் அறக்கட்டளையின் நோக்கம்

மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரமைக்க வேண்டியகட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இன்றைய காலகட்டமும் சூழ்நிலைகளும் மாணவர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் உள்ளன. எனவே, லவ்லி ப்ரெண்ட்ஸ் சேரிட்டபிள் அறக்கட்டளை மூலமாக மாணவர்களைத் தலைசிறந்தவர்களாக உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
"சிறந்த சமுதாயத்தை உருவாக்குவோம்" என்ற தலைப்பின் கீழ், மாணவர்களுக்கான ஒரு தளத்தை (Platform) அமைத்தோம்.
​எடுத்துக்காட்டாக, மாணவர்களின் முன்னேற்றத்திற்காகப் பின்வரும் வசதிகளை ஒவ்வொன்றாக ஏற்படுத்தினோம்: ​நூலகம் (Library)
​பாய்ஸ் கிளப் (Boys Club) &
விளையாட்டு ​டியூஷன் சென்டர் (Tuition Centre)

எங்களின் இறுதி லட்சியம்

விளையாட்டு, படிப்பு என இரண்டிலுமே மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் முதன்மை நோக்கம்.
​மாணவர்களைப் பண்புள்ளவர்களாகவும், நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாகவும் வளர்க்க விரும்புகிறோம்.
எதிர்காலத்தில் அவர்கள் அரசு அதிகாரிகளாக (Government Officers) உயர்ந்து, சாதனை படைக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களுக்கு உதவும் நற்பண்பும், சேவை மனப்பான்மையும் கொண்டவர்களாக அவர்கள் திகழ வேண்டும். ​இதுவே எங்களின் லட்சியப் பயணம்!

Library and Reading Activities

Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

×